ஜட்டியும் பிராவும் – The Hypocrisy

ஜட்டியும் பிராவும் - TheHypocrisy

பெண்ணின் உடை குறித்த பேச்சுக்கள், கருத்துக்கள் இன்றைய சூழலில் கொஞ்சம் அதிகமாகவே வளம் வருவதை நம்மால் காண முடிகிறது.

“ஒரு பெண் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை அவளே முடிவு செய்ய வேண்டும். அவளது comfort க்கு எது ஏற்றதாகத் தெரிகிறதோ அதை அவள் உடுத்துவதில் இந்த ஆண்களுக்கு என்ன பிரச்னை?” என்கின்ற கேள்வியை பெண்கள் முன் வைக்கின்றனர்.

இதற்கு எதிர் வாதம் பேசுபவர்கள் பெரும்பாலும் பண்பாடு, கலாச்சாரம், மதம் என்பனவற்றை base செய்தே தங்கள் வாதத்தினை முன் நிறுத்துகிறார்கள். இவர்கள் என்ன காரணியை எடுத்து வைத்துப் பேசினாலும் அது ஏற்புடையதல்ல என்பதே எனது stand இங்கே.

எனினும் இந்த பதிவில் நான் address செய்ய விரும்புவது, ” We are progressive. Choosing her dress is her own right. We totally accept and appreciate it. But it’s just that we are afraid of this society. The social setting around us hasn’t changed a bit. It makes us afraid and that’s why we are not ready for this ‘her choice – her freedom’ thing. We fear what this society may do to ‘our women’ if they went out in such clothes.

The day when this society evolves as a whole and becomes a bit progressive, we will be the first ones to let our women wear a dress of their choice and comfort” இப்படி பேசும் நம் குடும்பங்களைத் தான்.

மேலோட்டமாக பார்க்கையில் இவர்களது point of view சரிதானே, நியாயம் தானே என்பதாகவே தெரிகிறது. ஆனால் பிரச்னை என்னவெனில், “நம்மெல்லாரும் சேர்ந்தது தான society. இந்த சமூகம் நம் குடும்பத்தையும் உள்ளடக்கியது தானே” என்கின்ற உண்மை மட்டும் இவர்களது அறிவுக்கு எட்டுவதே இல்லை.

ஒரு பெண் ‘அணிய விரும்பும்’ modern dress  என்பதை எல்லாம் விட்டு விடுங்கள். ஒரு பெண் already அன்றாடம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் உள்ளாடைகள் மீதான நம் பார்வை எப்படி இருக்கிறது இங்கே?

ஆண்கள் அணிகின்ற பனியனையும் ஜெட்டியையும், “அட இது shirt, pant, trousers, shorts மாதிரி தான் பா, it’s just a dress, a piece of cloth” என்று  கடந்து செல்லும் வகையில் ஆண்களின் உள்ளாடைகளை ‘normalize’  பண்ணி வைத்திருக்கும் நமது குடும்பங்கள், ஏன் பெண்கள் அணியும் உள்ளாடைகளான braவிற்கும், pantiesற்கும் அதை பண்ணவில்லை? அல்லது at least அவற்றினை normalize பண்ணுவதற்கான முயற்சியைக் கூட எடுக்க ஏன் நம் குடும்பங்கள் தயங்குகின்றன? இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் braவையும், pantiesஐயும் “taboo” வாகவே வைத்திருக்கப் போகிறோம்?

ஒரு வீட்டின் மாடியில் அல்லது வெளியே கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் ஆணின் பனியனுக்கோ ஜட்டிக்கோ இருக்கும் சுதந்திரம் ஏன் பிராவிற்கு இருப்பதில்லை? அப்படியே இருந்தாலும் பனியன், ஜட்டி மாதிரி இன்றி கொடியில் தொங்கும் bra மட்டும் ஏன் பார்ப்பவர்களின் முகங்களை சுளிக்க  வைக்கிறது? அது ஒரு அசிங்கமாக கருதப்படுகிறது? எந்த வகையில் அது மட்டும் வக்கிரத்தை தூண்டுவதாகத் தெரிகிறது?

ஒரு பெண்ணின் தோள்பட்டையில் லேசாக தெரியும்  bra strapஆல் மட்டும் எப்படி ஒரு ஆணுக்கு கிளர்ச்சியை தூண்டிவிட முடிகிறது? ஆண் அணியும் பனியனால் இதைச் செய்ய முடியவில்லையே, ஏன்?

வீட்டில் அப்பாக்களது, அண்ணன்களது துவைத்து காய்ந்திருந்த ஜட்டிகளையும் பனியன்களையும் சாதாரண ஒரு துணியாய் நினைத்து மடித்து வைக்கும் அம்மாக்களும் தங்கைகளும் இன்று வீடுகளில் இருக்க, அம்மாக்களது, தங்கைகளது உள்ளாடைகளை மடித்து வைக்க மட்டும் ஏன் ஆண்களே இல்லை நம் குடும்பங்களில்?

பெண்ணின் உடைச் சுதந்திரத்திற்கும் அதை சுற்றியுள்ள விவாதங்களுக்கும் நான் மேற்கூறிய வைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என தோனலாம் பலருக்கு…

சம்பந்தம் இருக்கிறது.

தன் அம்மாவின் braவையும், தங்கையின் pantiesஐயும் “டேய் இதுவும் ஒரு உடை தான்டா நீ போடுற பனியன் ஜட்டி மாதிரி”ன்னு மகன்களிடமும் சகோதரன்களிடமும் சொல்லி கொடுத்து வளர்ப்பதால் மட்டும், பின் ஒரு நாளில் “ஏன் ஒரு பெண்ணின் உடலை மட்டும் இச்சமூகம் இவ்வளவு புனிதப் படுத்துகிறது” என்னும் கேள்வி அவனுக்குள் எழுந்து விடப் போவதில்லை.  இருந்தாலும், அக்கேள்வி எழுவதற்கான basementஐ அல்லது அக்கேள்வியை எதிர்நோக்கும் சிந்தனையை நிச்சயம் அவனுக்குள் அது விதைத்து விடும் என்பதை நிச்சயமாக சொல்லி விட முடியும் என்னால். பஸ்ஸில் தன் முன் நிற்கும் பெண்ணின், வெளியே தெரியும் bra strapஐ வெறிக்க வெறிக்க அவன் நிச்சயம் பார்க்கப் போவதில்லை

பெண்களின் innerwearsஐ குடும்பங்கள் முதலில் ‘normalize’ செய்யட்டும் என நான் சொல்வது இங்கு ‘solution’ இல்லை. அந்த solutionஐ arrive பண்ண, நாம் போட வேண்டிய பல ‘steps’க்களில் ஒன்றே.

அந்த ஒரு ‘step’ஐ த்தான் நம் ‘so called progressive ‘குடும்பங்கள் ‘ எடுத்து வைக்கட்டுமே…

Follow Author on Instagram – Abhimanyu

Leave a Comment

Your email address will not be published.